மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அது நீங்க திருக்கோவில்கள்! இருகூர்,ஒண்டிப்புதூர்,கோயம்புத்தூர்,சோழவந்தான்,மதுரை,பாலமேடு,கெங்கமுத்தூர்,திண்டுக்கல் சாத்தூர், விருதுநகர்,புதுக்கோட்டை,வாசுதேவபுரம், எர்ணாகுளம்,கீழவாசல், தஞ்சாவூர்

மாங்கல்ய தோஷம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். மனிதப் பிறவி எடுப்பதே, இல்லற வாழ்வில் ஈடுபட்டு, நல்லறம் செய்து, சந்ததிகளை உருவாக்குவதே. சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா, புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது தடை உண்டாகும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. இது பெண்ணிற்கு மட்டுமல்ல, ஆணிற்கும், 8-ஆம் இடத்தில் மேற்கூறிய கிரகங்கள் இருந்தால் கெடுபலனையே தரும். 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும். ஆண் பெண் இருவருக்கும் இதே மாதிரியான அமைப்பு இருந்தால், இவர்கள் இணை பிரியாத தம்பதியர்களாக, நீடித்த ஆயுளுடன், இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள்

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்?
தோஷமும் பரிகாரங்களும்:
செவ்வாய் தோஷம்:
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
ராகு-கேது தோஷம்:
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
சூரிய தோஷம்:
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
களத்திர தோஷம்:
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.

பெண்களின் ஜாதகமும் தோஷங்களும்
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டமாகிவிடும்

மாங்கல்ய தோஷம் நீங்க! திருக்கோயில்!,இருகூர்,ஒண்டிப்புதூர்,கோயம்புத்தூர்,சோழவந்தான்,மதுரை,பாலமேடு,கெங்கமுத்தூர்,திண்டுக்கல்
சாத்தூர், விருதுநகர்,புதுக்கோட்டை,வாசுதேவபுரம், எர்ணாகுளம்,கீழவாசல், தஞ்சாவூர்

நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இருகூர் - ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர்
பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை
தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை எல்லீஸ் நகர், மதுரை
நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல்
விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்
கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
மகாவிஷ்ணு திருக்கோயில், அடுவாச்சேரி-வாசுதேவபுரம், எர்ணாகுளம்
வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்


திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை

ஒரு புதிய பொட்டு தாலி தங்கத்திலோ அல்லது கவரிங் உலோகத்திலோ வாங்கி கொள்ளவும். தங்களது குல தெய்வம்,அல்லது தங்களது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலையை வைத்து பூஜை  செய்து ஒரு  மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொள்ளவும். ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ தங்களது இஷ்ட தெய்வங்களை மனதில் வழிபாடு  செய்து விட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த மங்கள தாலியை திருமணம் தடை பட்டு வருகின்ற பெண்ணின் கழுத்தில் கட்ட வேண்டும். அந்த    சுமங்கலிப் பெண் (தாய் அல்லது உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களாகவும்இருக்கலாம்.) திருமணம் தடைப் பட்டு வருகின்ற  பெண்ணின் கழுத்தில் கட்டப் பட்ட அந்த மாங்கல்யம் அந்த பெண்ணின் கழுத்தில் சுமார் இரண்டு மணி நேரமாவது இருக்க  வேண்டும். குறிப்பிட்ட இந்த காலக் கட்டத்தில் அந்தபெண் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும் என்றஅவசியமில்லை. இரண்டு    மணி நேரங்கள் கழித்து அந்த தாலி கட்டப் பட்ட  அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலிப்  பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்க்க செய்து விடவும். அதன் பிறகுஅந்த கன்னிப் பெண் குளிக்கவேண்டும். அதே சமயத்தில் தோஷம் கழிக்கும் போது உடுத்தி இருந்த உடைகளை மீண்டும் உடுத்தக் கூடாது. அதனால் அந்த உடைகளை வீசி எறியவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய  மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகள் வைத்து (மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள்,வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருள்களுடன் அந்த தாலியையும் வைத்து ) இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக தர வேண்ண்டும். இது ஒரு முறை.  அல்லது அந்த  தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாள் செவ்வாய், அல்லது வெள்ளி இல்லாமலிருப்பது  நல்லது  இப்படி  தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு  திருமணம் விரைவில் நடைபெறும்.

மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் பூமாத்தம்மன் வழிபாடு.

சென்னை திண்டிவனம் அருகே மாமண்டூரில் உள்ளது இக்கோவில். இக்கோவிலில் குழந்தை இல்லாதோர், மாங்கல்ய தோஷம் உள்ளோர் வேண்டி கொள்கின்றனர். சர்ப்பதோஷம், கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி அன்று இங்குள்ள அஷ்ட நாகங்களையும் வழிபட வேண்டும். தோஷம் நீங்க அஷ்ட நாகங்களுக்கும் தீபமேற்றி, பூமாத்தம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தும் உகந்தது. மேலும்  மாங்கல்ய தோஷம் நீங்க கவுரி மங்கள பூஜை செய்து தங்கத்தால் தாலி செய்து சுமங்கலி கையால் தாலிகட்ட சொல்வதும் இந்த கோவில் நடைமுறையில் உள்ள வழக்கம்.

மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை!

கும்பகோணம்-ஆடுதுறையில்
இருந்து 3 கி.மீ., தொலைலில் இருக்கிறது திருமங்கலக்குடி.

முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தார் அலைவாணர். அந்த அலைவாணர் தான் சுயம்பு லிங்கமாகக் கண்டெடுத்த பெருமானுக்காக கோயில் எழுப்ப எண்ணினார். அதற்காக வரிப்பணத்தைச் செலவு செய்தார். மன்னன் குலோத்துங்கன் அனுமதியின்றி தாமாகவே கோயிலைக் கட்டத் தொடங்கினார். மன்னனுக்கு அந்த செய்தி தெரிந்தது. மன்னன் அமைச்சரை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அமைச்சருக்கு இப்படி நடக்குமென்று முன்னபே தெரிந்திருந்ததால், தனது உடலை தாம் கோயில் கட்டும் ஊரிலேயே தகனம் செய்யுமாறு கோரியிருந்தான். அதன்படி அவனது உடலைத் திருமங்கலக்குடிக்கு எடுத்து வந்தனர். அதே நேரம், திருமங்கலக்குடி ஈசனின் கோயிலுக்கு வந்த அமைச்சனின் மனைவி, தனது கணவன் உயிருடன் வரவேண்டும்;  தனக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று அம்பிகையிடம் பிரார்த்தனை செய்தார். "உன் பிரார்த்தனை நிறைவேறும்' என்று அம்பிகையின் அசரீரி வாக்கு கேட்டது. ஊர் எல்லையில் அமைச்சனின் உடல் வந்தபோது, திடீரென அமைச்சனுக்கு உயிர் வந்தது. சுமந்து வந்தவர்கள் திடுக்கிட்டனர். இது எவ்வாறு என்று அறியாமல் குழம்பித் தவித்தபோது, அமைச்சர் அலைவாணர் கோயிலுக்கு ஓடினார். அங்கே தன் மனைவியின் பிரார்த்தனை குறித்து அறிந்தார். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த பெருமானைக் கட்டித் தழுவினார். அது முதல் பெருமான் அங்கே பிராணநாதேசுவரர் என்று அழைக்கப்பெற்றார். ஜீவநாயகனாகப் போற்றப் பெற்ற பெருமானின் அம்பிகை, அமைச்சனின் மனைவிக்கு மாங்கல்ய பலத்தை அருளியதால் மங்களாம்பிகை என்று போற்றப்பட்டார். அதன்பின்னர், அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை அருள வேண்டும் என்று அமைச்சனும் அவன் மனைவியும் வேண்டிக் கொண்டபடி, இங்கே வந்து வழிபடும் பெண்களுக்கு அவ்வாறே அருள்புரிகிறார் மங்களாம்பிகை.

 பெண்களுக்கும் தார தோஷம் உண்டா ?
 உதாரணம் மேஷ லக்ன பெண்ணுக்கு 7க்குரிய சுக்ரன் 6ல் நீசம். அந்த சுக்ரனே 2ம்இடமாகிய குடும்ப ஸ்தானத்துக்கும் அதிபதி அவர் 6ல் நீசமானதாலும் 7ல் 12மிட,9மிட அதிபதி குரு ராகுவுடன் சேர்ந்து அமர்ந்தது. 8மிடத்துக்கு அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் அமரந்து 8மிடம் பார்க்க 11மிட அதிபதி சனி 11ல் ஆட்சியுடன் பவர்புல்லாக 8மிடம் நோக்க அந்த பெண்ணிற்கு ஆயுள் அதிகமிருந்தது. ஆனால் இரண்டுமுறை திருமணம் செய்தும் தாரம் நிலைக்கவில்லை மூன்றாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்ருக்கின்றனர்.

விபரீத ராஜ யோகம் - மன்மோகன் சிங்-விஜய் மல்லைய்யா-நடிகர் ரஜினிகாந்த்-ஒசாமா பின்லேடன்-ஜாதகம்

இலவச ஜாதக ஆராய்ச்சி தளம்!, இலவச ஜோதிட ஆராய்ச்சி இணையதளமும்!, ஜோதிட மையம் இணையதள தொகுப்புக்களும்

 மாங்கலய தோஷம் என்றால் என்ன?
மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்
திருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை
மாங்கல்ய தோஷம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்?
 மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை!
மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் பூமாத்தம்மன் வழிபாடு.
களத்திர தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் அறிதல்
திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை 

                                                                     - ராஜ்